பைக் திருடிய 2 சிறுவர்கள் கைது

திருப்பூர், மார்ச் 2: திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் வினோத் (22). இவர் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி தனது பைக்கை திருமுருகன் பூண்டியிலிருந்து அவிநாசி செல்லும் ரோட்டில் நிறுத்தியிருந்த போது திருட்டு போனது. இது குறித்து திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருமுருகன் பூண்டி போலீசார் பாண்டியன் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் வினோத்தின் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories:

>