பஸ்- ஜீப் மோதியதில் தொழிலாளி பலி: 4 பேர் படுகாயம்

அவிநாசி, மார்ச் 2: கோபியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் கோவையை நோக்கி சேவூர் வழியாக அவிநாசி ரோட்டில் கருமாபாளையம் அருகே நேற்று  சென்றது. அப்போது ரோட்டைக் கடக்க முயன்ற பைக் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் வலப்புறமாக திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அவிநாசியில் இருந்து சேவூர் நோக்கி  சென்று கொண்டிருந்த ஜீப்பின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் வந்த இருவர் பஸ்சில் வந்த இருவர் உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜீப் ஓட்டி வந்த கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த பசீர் மகன் முகமது ஷாஹீர்(29) (தொழிலாளி) இறந்தார். படுகாயமடைந்த ஜலில்(28) மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>