புதுடெல்லி: நடப்பு ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோசமான ஆட்டத்தால் பிளே ஆப் சுற்றில் நுழைவது கேள்விக்குறியாகி உள்ளது. லக்னோ புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த தொடரில் டெல்லி கேப்டன் அக்சர் படேல், கொல்கத்தா கேப்டன் அஜிங்கிய ரஹானே, லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் மோசமான ஆட்டத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளனர். இம்மூவரும் அடுத்த ஆண்டு போட்டிகளில் கேப்டன் பதவிகளில் தொடர்வது சந்தேகம் என கூறப்படுகிறது.
