பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்

பெரம்பலூர்,மே 14: பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர். நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் நாள் உலக செவிலியர் தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவு கூற இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் களப்பணியா ளர்களாக இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆற்றிய சேவை என்பது இன்று வரை இன்றியமையாத ஒன்றாக பாராட்டப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கலா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் நளினா, ரேவதி, தமிழ்ச்செல்வி, கிரேஸ் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கேக் வெட்டியும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதில் செவிலியர்கள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கபட்டது.

 

Related Stories: