மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல்பரிசு வென்றதாக புகார் எழுந்துள்ளது. அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடக்கிவைத்து பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் ஒரே எண் கொண்ட டி- ஷர்ட் அணிந்து இருவர் விளையாடியதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16ம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் 4ம் சுற்றில் களமிறங்கிய கண்ணன் என்பவர் 12 காளைகளை அடக்கியதாக தெரிவித்து அவரை சிறந்த மாடுபிடி வீரராக அறிவித்து கார் பரிசு வழங்கப்பட்டது. கருப்பண்ணன் என்ற மாடுபிடி வீரர் 9 காளைகளை அடக்கியதாக அவருக்கு 2ம் பரிசு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த கருப்பண்ணன், முதலிடம் பிடித்த கண்ணன் மீது குற்றம்சாட்டியுள்ளார். முதல் சுற்றில் ஹரிகிருஷ்ணன் என்பவர் அணிந்து விளையாடிய 33வது எண் கொண்ட பனியன் அணிந்து கண்ணன் விளையாடி ஆள்மாறாட்டம் செய்து 12 காளைகளை பிடித்ததாக கணக்கு காட்டி முதல் பரிசை பெற்றதாக கருப்பண்ணன் புகார் தெரிவித்துள்ளார். இந்த முறைகேடு புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். அனைத்து வீடியோ பதிவினையும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனை நடைபெற்று டி-சர்ட் வழங்கக்கூடிய இடத்தில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. ஹரிகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் இணைந்து 12 காளைகளை அடக்கியுள்ளனர். தாம் 9 காளைகளை அடக்கியதால் தமக்கு முதல் பரிசினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து அலங்காநல்லூரிலும் முதல் பரிசு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. …
The post ஒரே டி – சர்ட் அணிந்து இருவர் விளையாடி மோசடி!: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல்பரிசு வென்றதாக புகார்..!! appeared first on Dinakaran.
