பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசருக்கு குருபூஜை விழா

பெரம்பலூர், மே 12: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில், அப்பர் என்கிற திருநாவுக்கரசருக்கு குருபூஜை விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவிலில், நாயன்மார்கள் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அப்பர் (எ) திருநாவுக்கரசருக்கு நேற்று (11ஆம்தேதி) சித்திரை மாதம் சதயம் நட்சத்திரம் நன்னாளில், குருபூஜை விழா நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணி முதல் 12 மணிக்குள்ளாக பால், தயிர், சந்தனம், பழவகைகளுடன் அனைத்து நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகா அபிஷேகம் முடித்து தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளில் நாட்டு மருந்துக் கடை ராமலிங்கம், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், திருஞானம் உட்பட ஏராளமான தின, வார வழிபாட்டு சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

Related Stories: