சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி, புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பின்வருமாறு நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ, புதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், துணை தலைவராக ஆர்.ஆர்.செந்தில்குமார் எம்எல்ஏவும், கொறடாவாக ஏ.கே.ரமேஷ் (எ) செந்தில் எம்எல்ஏவும், செயலாளராக வி.கார்த்திகேயன் எம்எல்ஏவும், பொருளாளராக விக்னேஷ் கண்ணன் எம்எல்ஏவும் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
