ஸ்காட்லாந்து எம்பியாக தமிழர் வெற்றி பெற்றார்: இரு பாலினத்தை சாராதவர்

 

லண்டன்: தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மணிவண்ணன் ஸ்காட்லாந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. இதில், ஸ்காட்டிஷ் கிரீன்ஸ் கட்சி சார்பில் எடின்பர்க், லோதியன்ஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி க்யூ.மணிவண்ணன் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார். இவர் கடந்த 2021ல் ஸ்காட்லாந்திற்கு குடிபெயர்ந்து, செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்து பிஎச்டி பயின்று வருகிறார்.

குறுகிய கால விசாக்களில் உள்ள வெளிநாட்டினர், நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களும் ஸ்காட்லாந்து தேர்தலில் போட்டியிட தகுதி பெற அனுமதிக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்பட்டதன் மூலம் மணிவண்ணன் தேர்தலில் போட்டியிட முடிந்தது. இவர் தன்னை ஆண், பெண் இருபாலினத்தையும் சாராத ‘நான்-பைனரி’ என அடையாளப்படுத்திக் கொள்பவர். தேர்தலில் வென்றதன் மூலம் ஸ்காட்லாந்தில் எம்பியாகும் 3வது இந்திய வம்சாவளி மற்றும் இருபாலினத்தை சாராத முதல் நபர் என்ற பெருமையை மணிவண்ணன் பெற்றுள்ளார்.

 

Related Stories: