இடைப்பாடி, மே 9: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் மற்றும் கொப்பரை ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 850 மூட்டை மஞ்சளை கொண்டுவந்தனர். ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11,002 முதல் ரூ.16,899 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.11,509 முதல் ரூ.14,099 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.36,229 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ரூ.75 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
தொடர்ந்து கொப்பரை ஏலம் நடந்தது. விவசாயிகள் 196 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கொப்பரை கிலோ ரூ120.40 முதல் ரூ.139.20 வரையிலம், இரண்டாம் தரம் கொப்பரை கிலோ ரூ.100.10 முதல் ரூ.115 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ரூ.11.37 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் 850 மூட்டை மஞ்சள் ரூ.75 லட்சத்திற்கும், 196 மூட்டை கொப்பரை ரூ.11.37 லட்சத்திற்குமாக மொத்தம், ரூ.86.37 லட்சத்திற்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள்
தெரிவித்தனர்.
