ஏற்காடு, மே 15: ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடை, நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வருங்காலங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும். 5 லிட்டருக்குக் குறைவான அளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களை ஏற்காடு ஒன்றியப் பகுதிக்குள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கேரி பேக், டீ கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் தட்டுகள் பயன்படுத்தக்கூடாது. கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தங்களது கடைகளிலேயே குப்பைத் தொட்டியில் வைத்து பராமரிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் வாகனத்தில் வரும்போது ஒப்படைக்க வேண்டும். தற்போது கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை இம்மாத இறுதி வரை பயன்படுத்தலாம். அதற்குப் பின்னர் பயன்படுத்த அனுமதி இல்லை. மேற்காணும் விவரங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் முதன்முறை எச்சரித்தும், மீண்டும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஊராட்சிகள் சட்டப்படி நிறுவனங்களை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
