ஈரோடு, மே 7: ஈரோட்டில் கேட்பாரற்று கிடந்த 80 கஞ்சா சாக்லேட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையம் பழைய குடியிருப்பு பகுதியில் தெற்கு போலீசார், நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்போது அதில், 450 கிராம் எடை கொண்ட 80 கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
