திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கண்டாச்சிபுரத்தில் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர்களுக்கு சொந்தமான 2 கூரை வீட்டில் ஒரு வீட்டில் மனைவி தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மற்றொரு வீட்டில் 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மதியம் ஒரு மணி அளவில் மகளைக் காணவில்லை என சிறுமின் தாய் தேடி பார்த்தபோது மற்றொரு கூரை வீட்டில் ரத்த காயங்களுடனும் வலையல்கள் உடைக்கப்பட்ட நிலையில் சிறுமி இறந்து கிடந்துள்ளார்.
புகாரின்படி கண்டாச்சிபுரம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி நகை பணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
