திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நான் உங்களுடன் இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் தி.மு.க கூட்டணி 72 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்ததுடன், பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியுள்ளது. மேலும் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஸ்டாலினைச் சந்தித்து வரும் நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவரான ரஜினிகாந்த், இந்த இக்கட்டான தருணத்தில் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் ஸ்டாலினிடம் பேசுகையில், “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Stories: