தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தங்களுக்கு விஜய் கடிதம் அனுப்பியது உண்மை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால், ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை மட்டுமே வைத்து முடிவு எடுக்க முடியாது, இதில் உள்ள நிறை குறை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுப்போம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
