சென்னை: சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்படாது என்ற சூழல் நிலவுவதால் எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தது. இதில் அதிமுக தேர்தல் முடிவில் 3வது தள்ளப்பட்டது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 45ஆக குறைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
இனிநிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வதற்காக நேற்று காலை, தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்று சில சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து பெற்றுக்கொண்டு, ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது தவெகவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றிருந்த லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், தவெகவினருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்காது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்படாது என்ற சூழல் நிலவுவதால் எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
