கந்தர்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

கந்தர்வகோட்டை ,மே 6: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. ராஜ கணபதிக்கு எண்ணை காப்பு செய்து, தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சர்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீர், பால்,தயிர், நெய், பன்னீர், போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாந்தி வண்ணமிகு வாசனை மலர்களாலும் அருகம் புல் மாலை அணிந்து சிறந்த முறையில் அலங்கார செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அபிஷேக ஆராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Related Stories: