சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், திமுகவை சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்றிருந்தார். தவெகவின் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்றார். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக முடிவு செய்யப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றனர். இதற்கு, தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், வெற்றி பெற்றவர் யார் என அறிவிப்பதில் நள்ளிரவு வரை இழுபறி நீடித்தது.
