மதுரை கோட்டத்தில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் செல்லாது

நெல்லை: மதுரை கோட்டத்தில் தண்டவாள புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மாதம்தோறும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாதம் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16848) இன்று (2ம் தேதி) முதல் மே 19ம் தேதி வரையும்1ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரையும் மதுரை சந்திப்பு, மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை நிலையங்களில் நிற்காது. அதற்கு பதிலாக மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணி செல்லும் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16363) வரும் 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய புதன்கிழமைகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரை சந்திப்பு மற்றும் திண்டுக்கல் நிலையங்களில் நிற்காது. அதற்கு பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுகிறது.

செங்கோட்டை – மதுரை சந்திப்பு பயணிகள் ரயில் (ரயில் எண் 56772) வரும் 4, 5, 7, 8, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் அருப்புக்கோட்டை, மானாமதுரை மற்றும் மதுரை கிழக்கு நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. கோயம்புத்தூர் – நாகர்கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16322) வரும் 6, 7, 15 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.

திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16732) வரும் மே 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக இயக்கப்படுகிறது. திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளிக்குடி நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் மானாமதுரை மற்றும் மதுரை கிழக்கு நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. மறுமார்க்கமாக பாலக்காடு – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16731) வரும் மே 7, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.

மதுரையில் இருந்து தென்காசி வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16327) வரும் 7, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. நாகர்கோவில் – கோயம்புத்தூர் சந்திப்பு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16321) மே 14ம் தேதியன்று விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக இயக்கப்படுகிறது. திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் நிலையங்களில் நிற்காது. மாற்றுப்பாதையில் மானாமதுரை மற்றும் மதுரை கிழக்கு நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: