சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி – தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னை: சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் “ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” – என இளங்கோவடிகள் போற்றிய சிலப்பதிகார தலைவி தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் சித்திரை முழுநிலவு நாளான சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள கண்ணகியின் சிலைக்கு மற்றும் ஒல்காப் புகழ் தொல்காப்பியர் சிலைக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர், கூடுதல் இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ்ச் சான்றோர்கள், பொது மக்கள் தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகி சிலைக்கும் மற்றும் ஒல்காப் புகழ் தொல்காப்பியர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொல்காப்பியம் ஒரு தலைசிறந்த இலக்கண நூலாகும். தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் என 27 இயல்களில் 1610 நூற்பாக்களை கொண்டது. 1963ம் ஆண்டு அண்ணா, தொல்காப்பிய ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும். தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது என்றார். அதன்படி, தொல்காப்பியரின் சிலைக்கு ஆண்டுதோறும் சித்திரை முழுமதி நாள் அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் சென்னையிலும் கன்னியாகுமரியில் உள்ள காப்பியக் காட்டிலும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: