சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை வாரம் 2 நாள் அவசர வழக்குகள் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, மே 1 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் முதல் வாரத்தில் மே 4 திங்கட்கிழமை, மே 5 செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் மே 6 புதன், மே 7 வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும். மே மாதத்தின் பிற வாரங்களில், திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம்; அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் கடைசி வாரத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும்.

அவசர வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில், மே 6, 7ம் தேதிகளில் நீதிபதிகள் எஸ்.சவுந்தர், எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜியும், மே 13,14ம் தேதிகளில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, பி.தனபால்,
என்.செந்தில்குமாரும்0, 21ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன், ஆர்.சக்திவேலும்7, 29ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முகமது சபீக், வி.லட்சுமிநாராயணனும் விசாரிப்பர்.
மதுரை கிளையில் மே 6, 7ம் தேதிகளில், நீதிபதிகள் பி.வேல்முருகன், எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன், மே13, 14ம் தேதிகளில் ஜி.கே.இளந்திரையன், கே.கே.ராமகிருஷ்ணன், கே.ராஜசேகர்0, 21ம் தேதிகளில் நீதிபதிகள் டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், ஆர்.பூர்ணிமா7, 29ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கே.முரளி சங்கர், பி.வடமலை ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர்.

Related Stories: