தர்மபுரி அருகே வாலிபர் மாயம்

தர்மபுரி, ஏப். 30: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் மடதஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 25ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரசேகர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நண்பர், உறவினர்கள் வீடுகளில் பெற்றோர்கள் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: