தர்மபுரி, ஏப்.30: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சந்து கடைகள் மூலம் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி பென்னாகரம் போடூர் கிராமத்தில் மதுவிற்ற நான்கு சந்து கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் சந்து கடை மூலம் மதுவிற்ற 4பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், அனைத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் சந்துக்கடைகள் மூலம் மதுவிற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் தர்மபுரி, பென்னாகரம் புதூர் காலனி, பாப்பாரப்பட்டி ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 11பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
