காபூல் : வேறு நாடுகளில் வாழும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகள் இணைந்து உருவாக்கியுள்ள மகளிர் அணி சர்வதேச போட்டிகளில் விளையாட FIFA அனுமதி வழங்கியுள்ளது. 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தபின், பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் ஆப்கன் வீராங்கனைகள் இணைந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளனர்.
