அரியலூர், ஏப்.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மே தினத்தினை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு 1.5.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
