வேதாரண்யத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி

வேதாரண்யம், ஏப்.29: நாகை மாவட்டம், வேதாரண்யம், நகராட்சி நல்லாத்தான்காட்டை சேர்ந்தகணபதி என்பவரது வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கணபதி குடும்பத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட ரெட் கிராஸ் மற்றும் வேதாரண்யம் ரெட்கிராஸ் சார்பாக, நிவாரண பொருட்களை ரெட் கிராஸ் நாகை மாவட்ட தலைவர் கைலமணி வேதரத்தினம் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் காமராஜ், முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் சிவகுமார் உள்ளிட்ட ரெட்கிராஸ் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: