கீர்த்திலால்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் வைரம் மற்றும் தங்க ஆபரண கண்காட்சி 2 நாள் நடக்கிறது

தேனி, பிப்.25: கீர்த்திலால்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தேனி மெட்ரோ கிங்ஸ் இணைந்து வைரம் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியை நடத்தவுள்ளது. இக்கண்காட்சியை ரோட்டரி கிளப்பின் முன்னாள் மாவட்ட கவர்னர் ரொட்டேரியன் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். இக்கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 10:30 முதல் இரவு 8 மணி வரை தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள ஹோட்டல் வெஸ்டர்ன் காட்ஸில் நடைபெறுகிறது. மேலும், இக்கண்காட்சியில் பிரத்யேக வடிவமைப்புடன் பிரீமியம் தரத்தில் தங்கம் மற்றும் வைர வளையல்கள், நெக்லஸ் செட்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள் போன்ற பல்வேறு வகைகளில் நகைகள் வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்வு செய்வதற்காக இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெறும் கீர்த்திலால்ஸின் ஆபரணங்கள் அனைத்தும் உயர்தர தங்கம் மற்றும் மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்ட வைரங்களில் இருந்து அனுபவமிக்க கைவினைக் கலைஞர்களால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன,

Related Stories: