சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மெட்ராஸ், கைவிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளிலிருந்து ஜியோதெர்மல் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை பைலட் அளவில் செயல்படுத்தி வருகிறது. இந்த பைலட் திட்டம் குஜராத் சூரத் அருகேயுள்ள ஓஎஞ்ஜிசி(ONGC) தளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் ரூ.15.5 கோடி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், இரண்டு ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக 450 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முயற்சியை ஐஐடி மெட்ராஸ் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரோகார்பன்ஸ் டெக் கன்சார்டியம், ஓஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ராஜேஷ் நாயர் வழிநடத்தி வருகிறார்.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், கைவிடப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளை சுத்தமான ஜியோதெர்மல் எரிசக்தி ஆதாரங்களாக மாற்றும் வழியை உருவாக்கும். இது இந்தியாவில் உள்ள பல உற்பத்தியற்ற கிணறுகளைப் பயன்படுத்தி பல ஜிகாவாட் அளவிலான நம்பகமான, 24 மணி நேரமும் கிடைக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
