×

கோடைக்கால மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் கொள்முதல் நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தேவை அதிகரிப்பது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு நிலைமை சற்று மாறுபட்டதாக உள்ளது. தமிழகத்தின் மின் நுகர்வு ஏற்கனவே 21,000 மெகாவாட் என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தாண்டிவிட்டது. வீடுகளில் குளிர்சாதன வசதிகளின் அதீத பயன்பாடு, வளர்ந்து வரும் சிறு மற்றும் குறுந்தொழில்களின் இயக்கம் மற்றும் விவசாயப் பணிகளுக்கான மின் தேவை என அனைத்தும் ஒரே நேரத்தில் உச்சத்தை எட்டியுள்ளன.

இந்தச் சூழலில் அண்மையில் ஒன்றிய அரசு அடுத்தமாதம் முதல் தமிழகத்தில் மின் பற்றாகுறை ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட் உயர்ந்து தென் மாநிலங்களில் முதலிடம் வகிப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இருப்பதால் மின் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மின் தேவை அதிகரித்தாலும், தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மின் பற்றாக்குறை மற்றும் தேவைகள் குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப வெளிச்சந்தையிலிருந்து மின்சாரத்தை நிலக்கரி மற்றும் வெப்ப மின் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...