×

பாஜ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்: எஸ்டிபிஐ தலைவர் குற்றச்சாட்டு

நெல்லை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகம்மது முபாரக், நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களும், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளும் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

களநிலவரப்படி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி.நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னம் நிச்சயம் உதிக்கும். தமிழக மக்கள் மாற்றத்தை விட முன்னேற்றத்தையே விரும்புகின்றனர். `ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற முழக்கம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான குரலாக ஒலிக்கிறது.

நன்னிலம் தொகுதியில் தேர்தல் நாள் வரை பண விநியோகம் நடந்தது. அதிமுக-பாஜ கூட்டணி பிரசாரத்திற்கு அனுமதி கேட்டால், உடனடியாக தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தது. தேர்தல் ஆணையம் பாஜ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறது. திமுக கூட்டணி மட்டுமல்ல, அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Election Commission ,BJP ,STBI ,Nellai ,Nellai Mohammed Mubarak ,Nannilam ,Secular Progressive Alliance ,Tamil Nadu ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...