சேலம்: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.9,000 வரையும், 30 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.17,500 வரையும் விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த வாரம் ரூ.2 கோடிக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையாகி இருந்தன.
