ஸ்டாலின் அலை வீசுவதால் தமிழ்நாட்டில் திமுக 2.0 ஆட்சி அமையவுள்ளது

அரியலூர், ஏப். 25: தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் திமுக 2.0 ஆட்சி அமையவுள்ளது என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் சிவசங்கர் தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. மிகப்பெரிய வெற்றியை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக 2.0 ஆட்சி அமையவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல இடங்களில் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகள் எல்லா சந்தேகத்துக்கும் மூல காரணமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் எந்த தேவையுமின்றி முக்கிய அதிகாரிகளை மாற்றியுள்ளனர். குறிப்பாக வாக்குப்பதிவுக்கு கடைசி 2 நாட்களில் அதிகாரிகளை மாற்றியது எல்ேலாரிடமும் ஒரு பயத்தை உண்டாக்கும் நடவடிக்கையாக தோன்றுகிறது.

அதிமுக வேட்பாளர்களின் சொந்தமான பல இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. குன்னம் தொகுதியில் அதிமுக மற்றும் ஐஜேகே கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் என்ற பெயரில் நோட்டீஸ் கொடுத்து வந்தனர். அதை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். இவர்களின் ஏமாற்று வேலைக்கு யாரும் பலியாக மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: