வேதாரண்யத்தில் கூரை வீடு தீயில் எரிந்து சாம்பல்

வேதாரண்யம், ஏப்.25: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி நல்லாத்தான் காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (73), விவசாயி. இவரது மனைவி தனபாக்கியம் (62). இருவரும் தங்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென இவர்களது வீடு தீப்பற்றியது.

தகவல் அறிந்து வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாவதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ அக்கம் பக்கம் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் கூரை வீடு முற்றிலும் எரிந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து வருவாய்த்துறை துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: