காரைக்கால், ஏப்.25: காரைக்கால் மாவட்டம், திருபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் திருபட்டிணம் பி.எம்.ஸ்ரீ.அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டியின் இவ்வாண்டுகான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவுக்குப் பள்ளியின் துணைமுதல்வர் தலைமை தாங்கி வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
உடற்கல்வி விரிவுரையாளர் விஜயலெட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சவதிராஜன் சிறப்பான முறையில் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துயிருந்தனர். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
