காரைக்காலில் என்.சி.சி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம்

காரைக்கால், ஏப்.25: காரைக்காலில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கிசுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.காரைக்கால் நேரு நகரில் 2(p)indep coy காரைக்கால் தேசிய மாணவர் படை சார்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி நேரு நகரில் உள்ள ஃபயரிங் ரேஞ்ச் இடத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் காரைக்கால் பகுதியில் உள்ள 150 JD/JW and SD/SW என்.சி.சி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நுணுக்கங்களை என்.சி.சி இரண்டாம் நிலை அதிகாரி ஏனாதி நாதன்(தலைவர் பா.சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளி தேனூர்) , யூனிட் ஜேசிஓ காதர் பாட்ஷா மற்றும் ஊழியர்கள் உடனிருந்து பயிற்றுவித்தனர்.

 

Related Stories: