ஜேஇஇ பிரதான தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மே 17ம் தேதி நடை​பெறும் ஜேஇஇ பிரதான தேர்​வுக்​கான விண்​ணப்ப பதிவு இன்று தொடங்​கு​கிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இது முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என 2 கட்​ட​மாக நடத்​தப்​படு​கிறது. 2026ம் ஆண்​டுக்​கான முதன்​மைத் தேர்வு ஜனவரி, ஏப்​ரல் மாதங்​களில் நடத்தி முடிக்​கப்​பட்​டன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்​கான பிர​தானத் தேர்வு மே 17ம் தேதி நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு நேற்று (ஏப்​.23) தொடங்​கியது. தகு​தி​யான மாணவர்​கள் https://jeeadv.ac.in இணை​யதளம் வாயி​லாக மே 2ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த ஆண்​டில் இத்​தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்​துகிறது. காலை, மதி​யம் என 2 தாள்​களாக தேர்வு நடை​பெறும்.

Related Stories: