மாற்றம் தேவையில்லை அஜித் கருத்தால் பரபரப்பு

நடிகர் அஜித்குமார், நேற்று சென்னை, திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளிக்கு காலை 7 மணிக்கு முன்னதாக வந்து முதல் ஆளாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த நடிகர் அஜித்குமாாரிடம், ‘மாற்றம் வருமா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்தபோது ‘நோ நீட்’ (மாற்றம் தேவையில்லை) என்று என்று பதில் அளித்தார்.

திமுக கூட்டணிக்கு ஆதரவாக அஜித் பேசியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘அஜித்திடம் இந்த தேர்தலில் மாற்றம் வேண்டுமா என கேட்டதற்கு அவர் மாற்றம் தேவையில்லை என பதில் அளித்தது குறித்த என்ன நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேட்டபோது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அஜித் நல்ல கருத்துதானே சொல்லியிருக்கிறார்’’ என்றார்.

ஆனால் மாற்றம் தேவையில்லை என்ற கருத்தை அஜித்குமார் சொல்லவில்லை என நடிகர் அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டிக்காக மைக்கை நீட்டி, தமிழகத்தில் மாற்றம் தேவையா என கேட்டதாகவும், அதற்கு அஜித் பேட்டி வேண்டாம் என்றுதான் கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: