சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் கூடியதற்கு காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (எஸ்ஐஆர்) பிறகு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது எஸ்ஐஆருக்கு பிறகு தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். தமிழக சட்டப்பேவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவிகிதம் 85 சதவீதம் வரை பதிவாகியுள்ளது.
இதற்குஎஸ்ஐஆர் காரணமா அல்லது மற்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிடுவதால், அதிகம் பேர் ஆர்வமாக வந்து வாக்களித்தது காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், எஸ்ஐஆர் (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) தான் வாக்கு சதவீதத்திற்கு அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காரணம், தமிழகத்தில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாக்காளர் அடையாள வைத்து ஏமாற்றியது கண்டறியப்பட்டு எஸ்ஐஆர் மூலம் அதிரடியாக தேர்தல் ஆணையம் நீக்கியது. தமிழகத்தில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால், கள்ள ஓட்டு போடுவது என்பது முடியாத காரியமாகும். அதனால், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமே வாக்கு சதவீதம் அகரித்ததற்கு காரணமாகும். இதற்கு முன்பாக கடந்த சில தேர்தல்களில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு சதவீதம் எவ்வளவு பதிவானது என்ற விவரங்களை பார்க்கலாம்.
* தமிழகத்தில் கடந்த 11 தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதுதான் அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்த (2026) தேர்தலிதான் அதிகபட்சமாக 85.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைவு என்று பார்த்தால் 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெறும் 59.07 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. இதுவரை அதிகபட்சமாக உள்ள 78.29 சதவீதம் என்ற ரெக்கார்டை இந்த தேர்தல் முறியடித்துள்ளது. மேலும், இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது நடைபெற்ற தேர்தலில் வாக்கு சதவீதம் 85ஆக உயர்ந்துள்ளது.
* சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டு வாரியாக வாக்கு சதவீதம்
1951 54.75%
1957 46.56%
1962 70.65%
1967 76.57%
1971 72.10%
1977 61.58%
1980 65.42%
1984 73.47%
1989 69.69%
1991 63.84%
1996 66.95%
2001 59.07%
2006 70.56%
2011 78.29%
2016 74.81%
2021 73.63%
2026 85%
* மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம்:
மாவட்டம் சதவீதம்
சென்னை 83.73%
திருவள்ளூர் 83.76%
காஞ்சிபுரம் 87.39%
செங்கல்பட்டு 85.39%
கோவை 84.76%
மதுரை 80.55%
திருச்சி 85.43%
அரியலூர் 87.41%
கடலூர் 85.49%
தர்மபுரி 90.13%
திண்டுக்கல் 89.22%
ஈரோடு 90.10%
கள்ளக்குறிச்சி 88.33%
கன்னியாகுமரி 75.61%
கரூர் 92.62%
கிருஷ்ணகிரி 85.31%
மயிலாடுதுறை 82.14%
நாகை 86.30%
நாமக்கல் 90.21%
பெரம்பலூர் 85.50%
புதுக்கோட்டை 83.90%
ராமநாதபுரம் 77.03%
ராணிப்பேட்டை 89.89%
சேலம் 90.74%
சிவகங்கை 76.66%
தென்காசி 82.40%
தஞ்சாவூர் 80.63%
நீலகிரி 78.96%
தேனி 81.55%
திருவாரூர் 83.71%
தூத்துக்குடி 80.55%
திருநெல்வேலி 77.94%
திருப்பத்தூர் 88.96%
திருப்பூர் 88.59%
திருவண்ணாமலை 89.59%
வேலூர் 88.76%
விழுப்புரம் 89.00%
விருதுநகர் 84.89%
