விஜய் நீலாங்கரையில் வாக்குப்பதிவு செய்தார் தவெகவினர் திரண்டதால் வாக்குப்பதிவு மையத்தில் தள்ளுமுள்ளு

சென்னை: தமிழகத்தில் நேற்று காலை 7 மணி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள மாநகராட்சித் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 8 மணிக்குத் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தவெக தலைவர் விஜய் தனது வாக்கைப் பதிவு செய்ய வந்ததால், தவெகவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் வாக்குப் பதிவு மையத்தில் திரண்டர். முன்கூட்டியே ஏராளமான காவல் துறையினர் அந்த வாக்குச் சாவடியில் குவிக்கப்பட்டுத் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனாலும், விஜய் வந்த பிறகு அவரைப் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் தவெகவினர் முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால், காவல்துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் விஜயை அழைத்துச் சென்று வாக்களிக்க வழிவகை செய்தனர். தொடர்ந்து, விஜய் வாக்களித்த பின்னர் திரும்பச் செல்லும்போதும் தவெகவினரால் மீண்டும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால், அங்கு வாக்களிக்க வந்த முதியோர் உள்ளிட்ட வாக்காளர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர்.

Related Stories: