சென்னை: மே 17ம் தேதி நடைபெறும் ஜேஇஇ பிரதான தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது. 2026ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வு மே 17ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று (ஏப்.23) தொடங்கியது. தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in இணையதளம் வாயிலாக மே 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் இத்தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. காலை, மதியம் என 2 தாள்களாக தேர்வு நடைபெறும்.
