×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இவாவை வீழ்த்திய ஜாங் 2வது சுற்றுக்கு தகுதி

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை ஜாங் சுவாய், ஜெர்மன் வீராங்கனை இவா லிஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சீன வீராங்கனை ஜாங் சுவாய் – ஜெர்மனி வீராங்கனை இவா லிஸ் மோதினர்.

முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய ஜாங், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் ஆக்ரோஷம் காட்டிய அவர், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஹங்கேரி நாட்டின் பன்னா உட்வார்டி, ஆஸ்திரேலியா வீராங்கனை கிம்பர்லி பிரெல் மோதினர். இப்போட்டியில் சமபலத்துடன் மோதிய பன்னா, பிரெல் முதல் இரு செட்களை ஆளுக்கொன்றாக வசப்படுத்தினர். கடைசியில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, பன்னா கைப்பற்றினார். அதனால், 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற பன்னா 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Zhang ,Madrid Open ,Eva ,Madrid ,Zhang Shuai ,Eva Lis ,Madrid, Spain.… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..!