200க்கும் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெல்லும்: ஓபிஎஸ் மகிழ்ச்சி

தேனி: போடி தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்களித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து மக்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றி தரக்கூடிய நிலை உருவாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டு காலம் மகத்தான ஆட்சியை வழங்கியதன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி அளிப்பார்கள்.

இதன்மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்ற நிலை உருவாகி இருக்கிறது’’ என்றார். தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது, ‘‘மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு, எவ்வளவு வாக்குகள் பெறுகிறார் என்பதை பொறுத்துதான் விஜய்யின் எதிர்காலம் இருக்கும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

Related Stories: