திண்டுக்கல், ஏப். 23: திண்டுக்கல் அறிஞர் அண்ணா பூமார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நேற்றைய தினம் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. தேர்தல், சுபமுகூர்த்த தினங்கள், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் மார்க்கெட்டில் பூக்களில் தேவை குறைந்ததால் கடுமையாக விலை குறைந்துள்ளது.
சம்பங்கி ஒரு கிலோ ரூ.20க்கும், ரோஸ் ரூ.120க்கும், கோழிகொண்டை ரூ.40க்கும், செவ்வந்தி ரூ.100க்கும், மல்லி பூ ரூ.300க்கும், முல்லை பூ ரூ.120க்கும், ஜாதி பூ ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.250க்கும், காக்கரட்டான் ரூ.300க்கும், அரளி ரூ.30க்கும், வாடாமல்லி ரூ.30க்கும் செண்டு மல்லி ரூ.40க்கும், விருட்சி பூ ரூ.60க்கும், பட்டன் ரோஸ் ரூ.150க்கும், தாமரை பூ ஒன்று ரூ.10க்கும் விற்பனையானது. பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
