சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

சீர்காழி, ஏப். 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் இன்று 23ம்தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதற்காக 29 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு ப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

இந்த பணிகளை மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜரத்தினம், வட்டாட்சியர்கள் சண்முகம், பிரான்சுவா, சபிதா தேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் பாபு, கணேசன், ரகு, ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பாலாஜி, அண்ணா சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Related Stories: