நத்தம் அருகே மது விற்ற 2 பேர் கைது

 

நத்தம், ஏப். 22: நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்பெக்டர் தமிழ்ச்செல்வன், எஸ்ஐ மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கருத்தலக்கம்பட்டி புதூரில் சேத்தூர் மங்கம்மாள் சாலையை சேர்ந்த கந்தசாமி (27) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மங்கம்மாள் சாலை பஸ் நிறுத்தத்தில் மது விற்ற சேத்தூர்- குரும்பபட்டியை சேர்ந்த சக்திவேல் (49) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: