சட்டைநாதர் சுவாமி கோயிலில் இன்று திருமுலைப்பால் விழா

 

சீர்காழி, ஏப். 22: சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் இன்று திருமுலைப்பால் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வர சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.  இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருநிலைநாயகி ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருமுலைப்பால் வழங்கும் விழா இன்று மதியம் 12மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

Related Stories: