சத்துணவு ஊழியர்கள் தென்காசியில் மறியல்

தென்காசி, பிப்.24: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 348 பெண்கள் உள்பட 364 பேரை போலீசார் கைதுசெய்தனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக நேற்று கருப்பு உடை அணிந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 மாவட்டத் தலைவர் பிச்சுமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோயில்பிச்சை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சண்முகசுந்தரம், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருமலை முருகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சுப்பிரமணியன், ராஜசேகர், கங்காதரன், ராசையா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துரைசிங், நாராயணன், கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 348 பெண்கள் உள்ளிட்ட 364 பேரை டி.எஸ்.பி.கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Related Stories: