×

அசம் கான், மகனின் அப்பீல் மனு நிராகரிப்பு

ராம்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மூத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முகமது அசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆகியோர் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் இருவரும் ராம்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதை விசாரித்த சிறப்பு நீதிபதி அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு அசம் கான் மற்றும் அவரது மகன் இருவர் மீதான தண்டனையை உறுதி செய்தார்.

Tags : Asam Khan ,Rampur ,Samajwadi Party ,Mohammad Assam Khan ,Abdullah ,Uttar Pradesh ,
× RELATED மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத...