×

அனில் அம்பானி குழும மாஜி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: வங்கி கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள் அமிதாப் மற்றும் அமித் பாப்னா ஆகியோரை மே 2ம் தேதி வரை காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி கடன் மோசடி மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அமிதாப் ஜூன்ஜூன்வாலா மற்றும் அமித் பாப்னா ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களது ஐந்து நாள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் நேற்று இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் விசாரணை மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதால், அவர்களை விடுவிப்பது விசாரணையை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்களது காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்நது அமிதாப் மற்றும் அமித் பாப்னா ஆகிய இருவரையும் மே 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Anil Ambani Group ,New Delhi ,Anil Ambani ,Reliance Group ,Amitabh ,Amit Bapna ,
× RELATED மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத...