- ராகுல்
- லக்னோ
- மக்களவை
- ராகுல் காந்தி
- இந்தியா
- இங்கிலாந்து
- பாஜக
- விக்னேஷ் ஷிஷிர்
- கர்நாடக
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
லக்னோ: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜ நிர்வாகி விக்னேஷ் ஷிஷிர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாததால் மனுவை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கி கொள்வதாக நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
