தன்னை தொகுதிக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவதூறு பரப்பிய செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருமான வரித்துறை ஆணையர் கமிஷனர் ஆபீசில் மனு

சென்னை: தன்னை ஸ்ரீபெரும்பதூர் தொகுதிக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அரசு துறை மீது தவறான அவதூறு தகவல்கள் பரப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளரான செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆணையர் ரஜிதா புகார் அளித்துள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆணையர் ரஜிதா நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், தன்னைத் தொகுதிக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. 20ம் தேதி அன்றோ அல்லது அதற்கு சமீபத்திய தேதிகளிலோ செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்த விதமான சோதனையோ, ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை.

அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செல்வப்பெருந்தகை கூறியுள்ள தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தவறான தகவல்களைப் பரப்பியது மற்றும் அரசு துறை மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது ஆகியவற்றுக்காக சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: